Friday, February 01, 2019

(அவ)மரியாதை

(அவ)மரியாதை

ஒரு தாய்க்கு இரு குழந்தைகள், ஆண் குழந்தைக்கு நல்லவைகள் கொடுக்க பட வேண்டும் என்பது அன்றைய சமுதாய நிலையாக அவளுக்கு ஊட்டபட்டிருந்தது, அதன்படி ஆண் குழந்தையை ஒரு படி எல்லாவற்றிலும் அதிகம் கவனித்தாள். சமைக்க பட்ட பொருள் இருந்தால் உள்ளதில் நல்லது அவளது அந்த ஆண் குழந்தைக்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்தாள். பெண் குழந்தைக்கு மனக்குறை வளரும் பருவம் முழுவதும் இருந்தது ஆனால் சமுதாயம் அப்படி தான் என்று பாட்டி முதல் எல்லோரும் சொல்லி கொடுத்தார்கள். மனம் குமுறினாலும் ஒன்றும் சொல்லாமல் அப்படியே காலம் கழிந்தது. தான் செய்வது சரி தான் என்று அந்த தாய் நினைத்தாள்.

ஆண் குழந்தை பெரியவனானது, வேலைக்கு செல்ல ஆரம்பித்தார் அந்த மகன், ஆனாலும் பெண் குழந்தை ஒரு படி கீழ் என்ற நிலையிலேயே தான் பார்க்க பட்டது. அந்த மகளுக்கு புரியவில்லை ஏன் அந்த பக்ஷபாதம் என்று யோசித்து யோசித்து பார்த்தாலும் புரியவில்லை. இருந்தும் அப்படியே வாழ்ந்தாள். தன மகனுக்கு அரவணைப்பு அதிகரித்தது, எப்படி எல்லாம் நல்லது என்று படுமோ அது எல்லாம் கொடுக்க பட்டது, கறி  செயதாலும் எலும்பு இல்லாத கறி கிடைக்கும் ராஜகுமாரனான அந்த மகனுக்கு

காலம் கடந்தது மகனுக்கு திருமண பருவம் வந்தது, ஒரு நல்ல பெற்றோராக மணமுடித்தார் அந்த மகனுக்கு, தேடி தேடி ஒரு நல்ல மருமகளும் கிடைத்தது அந்த மகனுக்கு பெற்றோருக்கு பெரும் சந்தோஷம்

வாழ்க்கை சந்தோஷமாக நடந்து கொண்டிருந்தது, மகனும் தன தாய்க்கு கொடுக்க வேண்டிய முக்கியத்துவம் அனைத்தும் கொடுத்து கொண்டே இருந்தார், மிகவும் பார்த்து பார்த்து வளர்த்த மகனல்லவா.

மருமகளுக்கு வீடு புதிது, பழகினாள். அவளுக்கு எல்லாம் வழங்கப்பட்டது எல்லாம் சந்தோஷமாக இருந்தது. ஆனால் அவள் மனதில் ஒரு குமுறல் இருந்து கொண்டே இருந்தது. மனைவியாக அவளுக்கு தன கணவன் இருக்கும்போதும் அவர் தன தாய்க்கு மரியாதை மற்றும் முக்கியத்துவம் கொடுத்தார், முதலில் பிழை ஒன்றும் இல்லாததாகத்தான் அவருக்கும் தோன்றியது.

சில நேரங்களில் தாய்க்கு கொடுக்கப்படும் முதல் மரியாதை மனைவிக்கு கொடுக்கப்படும் அவமரியாதை ஆனது. மனதில் தேக்கி வைத்தாள் மனைவி.  மனைவியிடம் கேட்டு செய்ய வேண்டும் என்ற மாமூலான மனைவிதான் எல்லோரும்  இல்லையா, அவளும் அது போல் ஏன் தனக்கு மரியாதை கிடைக்க இல்லை என்று நினைத்தாள். கணவனின் தாய எதிரியானாள்.

அதற்கேற்ற படியே தன கணவனும் தன்னை அவமதிக்கும் பல நிகழ்வுகள் நடந்தன. என்ன செய்வதென்று தெரியாமல் திணறினாள் மனைவி. தன சுற்றி இருக்கும் மற்றவர்களை பார்த்தாள், ஏதோ ஒன்று தனக்கு குறைவாக கிடைக்கிறது என்று நினைத்தாள். அதற்க்கு தான் ஏதாவதும் செய்து போன மரியாதை திரும்ப கிடைக்க என்ன செய்யலாம் என்று யோசித்தாள்.

வெடிக்க வேண்டிய ஒரு குண்டாக அது மாறியது. கிடைக்கும் சந்தர்ப்பங்களை பயன்படுத்தினால் மனைவி. ஆனால் அவளுக்கு அவமரியாதைகள் என அவள் நினைக்கும் காரியங்கள் நடந்து கொண்டே இருந்தது.  தன கணவன் தான் கடவுளாக பார்க்கும் தன தாயாய் எதிரியாக எப்படி மாற்றுவது என்று யோசித்தாள். தனக்கு கிடைக்க வேண்டிய மரியாதைக்காக, அந்த பணியை செய்து கொண்டே இருந்தார்.

ஆனால் பாருங்கள் அவர்களுக்கு கொடுக்கும் மரியாதை தன மனைவிக்கு கொடுக்கும் அவமரியாதை என்று அந்த குடும்பத்துக்கு தோன்றவே இல்லை. தாய்க்கும் தோன்றவில்லை, மகனுக்கும் தோன்றவில்லை. ஆனால் அது ஒரு ஆழமான நெருப்பாக மருமகளின் மனதில் மட்டும் இருந்து கொண்டே இருந்தது.

அம்மியும் நகர்ந்தது, வெற்றி பெற்றாள் மருமகள். மகனுக்கு வெறுப்பு வந்து விட்டது, கொஞ்சம் கொஞ்சமாக எல்லா மரியாதையும் இழந்தாள் தாய். மகன் திட்டாத நாளே இல்லை என்று மாறியது. நல்லது மட்டுமே கூறி கொண்டிருந்த தாய் தன மகனை சபித்தாள். வீடு நரகமானது. ஆனால் தனக்கு நடந்த அவமானம் மரியாதையாக மாறியதை சந்தோஷமாக கொண்டாடினாள் அந்த மருமகள். ஆனால் பாவம் அந்த தாய்க்கு ஒன்றும் செய்யாத என்னை ஏன் இப்படி எல்லாமாக நான் நினைத்த தன மகன் வெறுக்கிறான் என்ற நிலை புரியவேயில்லை .

திட்டினார்கள் சபித்தார்கள், தாயும் தந்தையும் ஒரு அவமரியாதை தங்களுக்கு நடந்தால் அதை ஏற்க மனமில்லாமல் திட்டினார்கள். ஆனால் மகனுக்கு எப்படி தன மனைவிக்கு கொடுக்க பட்ட அவமானம் அவமானமாக தெரியவில்லையோ அது போலெ தன தாய்க்கு தான் செய்பவை தவறாக தெரியவில்லை. எப்படி முதலில் தன தாய்க்கு முதல் மரியாதை கொடுத்தானோ இப்போது தன மனைவிக்கு முதல் மரியாதை கொடுத்தான் ஆனால் அப்படி கொடுக்கும்போது தனக்கு தெரியாமல் தன தாயை அவமதிக்கிறான் என்று அவனுக்கு புரியவில்லை. அவன் தன மனைவியக்கு கொடுக்கும் மரியாதை ஏன் தன பெற்றோர்கள் தவறாக நினைக்கிறார்கள் என்று நினைத்தான். தான் நல்ல வழியில் முன்பு தாய்க்கு ஒன்றும் தெரியாமல் தான் தாய்க்கு கொடுத்த மரியாதை தன தாரத்துக்கு ஒரு மனக்குமுறலாக மாறி ஒரு குண்டு வெடித்தது. அது தற்போது தன தாரத்துக்கு கொடுக்கும் மரியாதையாக மாறியபோது, தன தாயை அவமதிப்பதாக மாறியது.

தன குற்றம் என்ன என்பதை யோசித்தான் மகன், சபித்தாள் தாய்,  பாராட்டினாள் தாரம்.

தனக்கு நடக்கும் எல்லாவற்றையும் முன்பு ஒரு படி கீழே என்று நினைத்த தன மகளுக்கு உரைத்தாள் தாய், மனக்குமுறல் வெளிப்படும் ஒரு இடமாக அது மாறியது. மனம் சொல்ல ஒரு இடம் உள்ளதே என்று சந்தோஷப்பட்டது. கூறினாள் கூறினாள் கூறிக்கொண்டே இருந்தாள். நாட்கள் கடக்க கூற நிறைய இருந்தது, சபிப்பதற்கும் நிறைய காரியங்கள் இருந்தன, சபதங்கள் ஆயின, சம்பூர்ண சபதங்கள் ஆயின.

இதனிடையில் தன மகளல்லவா, தனதல்லவா ஆம் தனது தான் ...

தனது என்று தன மகனை எப்படி நடத்தினாலோ ... இப்போது மகளாக மாறியது, மகளும் மரியாதை கொடுத்தார், தாயும் மரியாதை கொடுத்தார் ....

அவர்கள் கொடுக்கும் பரஸ்பரம் மரியாதை .....அங்கு புதிதாக வந்திருக்கும் மருமகனுக்கு அவர்களுக்கு தெரியாத அவமரியாதை. அவர்கள் கொடுக்கும் மரியாதை வேறு யாரையோ அவமதிக்கிறதா ? அவர்களுக்கு அப்படி தோன்றவில்லை ... எப்படி தோன்றும் ? அவரவர்களுக்கு அவர் அவர் செய்வது அறம் மட்டுமே...

தன மகன் செய்வதும் தனக்கு அறம் என்ற எண்ணத்திலே தான் ....


.....